Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இமாம் கஸ்ஸாலி பாடசாலை Band வாத்தியக் குழு மாணவர்கள் சாதனை!


 இமாம் கஸ்ஸாலி பாடசாலை Band வாத்தியக் குழு மாணவர்கள் சாதனை...!


கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான Band வாத்திய குழுப் போட்டி 2024.10.29ஆம் திகதி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 


இப்போட்டியில்

    1. ஆண்கள் பிரிவு Band வாத்தியக் குழு. 

    2.கெடட் பிரிவு Band வாத்தியக் குழு.

    3.பெண்கள் பிரிவு Band வாத்தியக் குழுவென போட்டிகள் நடைபெற்றன. 


இதில் இம்மாம் கஸ்ஸாலி பாடசாலையானது ஆண்கள் போட்டிப்பிரிவில் மூன்றாம் இடத்தினைக் கல்முனை வலய மட்டத்தில் பெற்றுக்கொண்டது. 


இப்போட்டியானது கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜாபீர், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.முதரீஸ், சுகாதாரப்பாட வளவாளர் அன்சார் ஆகியோரினால் கல்முனை வலயத்தில் முதன் முறையாக இவ்வாறானதொரு போட்டி நடாத்தப்பட்டதுவும் இதுவே முதற்தரமாகும். 


இப்போட்டியில் மாணவர்களின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ஆசிரியர்களான A. JABEER GAFOOR, KM.SIFAY, MC. HAROON, MRM. IRFAN, MIM. NASEEM மற்றும் முன்னாள் அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியின் விரிவுரையாளரும் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் ஆசிரியருமான AMEER Sir ஆகியோர்களுக்கும், Band வாத்தியக் குழு மாணவர்களுக்கும் விஷேடமாக பாடசாலையின் BAND வாத்திய பெருட்களைப் பெற்றுத்தந்த பாடசாலையின் பழைய மாணவர் SL. NASIROON அவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் SMM. JABEER சேர் அவர்கள் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்.


@CM

Tags

ads