Type Here to Get Search Results !
Developed by Cleverbit

RCB அணி தலைவராக மீண்டும் கோலி!

 


RCB அணி தலைவராக மீண்டும் கோலி!



2025 ஐபிஎல் தொடரில் RCB அணியின் தலைவராக மீண்டும் விராட் கோலி செயற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.


இந்த போட்டிக்கான வீரர்களின் மாபெரும் ஏலத்தை நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் RCB அணியில் விராட் கோலி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மேலும் அவரே RCB அணியின் தலைவராகச் செயற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


இதேவேளை ஐபிஎல் 2021இல் RCBயின் தலைவர் பதவியிலிருந்து கோலி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


@CM

ads