Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் மீனவர்கள் ஜும்ஆ பள்ளிவாசலிடம் முன்வைத்த விசேட வேண்டுகோள்.

 


நிந்தவூர் மீனவர்கள் சார்பாக விசேட வேண்டுகோள் நேற்று ( 2024.10.21)  நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவிடம் முன்வைக்கப்பட்டது.


மேலும் அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது தற்போது அமைந்துள்ள நிந்தவூர் பிரதேச சபையின்   கீழ் இயங்குகின்ற  பொதுச்சந்தையில் வியாபாரம் மந்த கதியில் செல்வதாகவும்,கடந்த காலங்களில் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் அருகாமையில் இயங்கிவந்த சந்தைக்கான அனுமதியினை மீண்டும் தற்காலிகமாக  வழங்குமாறு வேண்டிக்கொண்டனர்.இந்த கோரிக்கையினை தொடர்ச்சியாக அவர்கள் மேற்கொண்டவண்ணம் உள்ளனர்.மேலும் இம் மீனவர்கள் அகதிகளைப் போன்று வீதிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் நாம் அறிந்த விடயமாகும்.


இதனை கருத்தில் கொண்டு நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகக் குழு இது ஒரு மனிதாபிமானப்பணியாக இருப்பதாலும்,தற்போதைய சந்தை நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் இயங்குவதாலும் ஒரு சுமூகமான தீர்வை பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர்.

Tags

ads