கிழக்கு மாகாண ஸ்ரீ லங்கா சோட்டோக்கன் கராத்தே தோ சம்மேளனத்தின் மாகாண கராத்தே சுற்றுப் போட்டி கடந்த ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் சம்மேளனத்தின் தலைவர் சிஹான் கேந்திரமூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் சிறுவர் தொடக்கம் பெரியோர் வரையான ஆண்கள்,பெண்கள் இருபாலருமான கூடுதலான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் அம்பாறை மாவட்ட SKMS நிந்தவூர் கிளையின் கராத்தே மாணவர்கள் காத்தா மற்றும் குமித்தே போட்டி நிகழ்ச்சியில் 17 பேர் கலந்து கொண்டிருந்ததோடு எமது மாணவர்கள் 07 தங்கப்பதங்கங்களையும், 06 வெள்ளிப் பதக்கங்களையும், 06 வெண்கலப் பதக்கங்களையும் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர். இவர்களில் தங்க மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று வெற்றியீட்டிய சாதனையாளர்கள் ஸ்ரீ லங்கா சோட்டோக்கன் கராத்தே தோ சம்மேளனத்தின் தேசிய கராத்தே சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இவ்வெற்றியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய கராத்தே பயிற்றுவிப்பாளர் சென்செய் நிம்ஷி மற்றும் மேலதிக பயிற்சிகளை வழங்கிய பிரதம போதனாசிரியர் சிஹான் Ms.வஹாப்தீன் அவர்கள் வழங்கியதோடு மேலதிகமான ஆலோசனைகளை சங்கத்தின் கராத்தே தொழில்நூட்ப ஆலோசகர் சிஹான் ZA.Rauf வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அட்டாளைச்சேனை தேசியக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் ஜனாப் M.I.M. அஹமட் ஹுசைன் அவர்கள் மாணவர்களின் ஒழுக்க விழுமிய விடயங்களில் ஆலோசனை வழங்கி ஊக்குவித்தமை நினைவுகூரத்தக்கதாகும்.
