Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு போட்டி நிகழ்ச்சிகள்

  


அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் நூலக பொறுப்பாசிரியை MRS.ASHRAFF THAHA அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று 2024.10.24 ஆம் திகதி தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு எமது பாடசாலையின் நூலகத்திற்கு 3N PRESS உரிமையாளரினால் பாடசாலைக்கு பெருமதிமிக்க புத்தகங்கள் பாடசாலை முதல்வரிடம் அன்பளிப்பு செய்யப்பட்டன.


 அத்துடன் நூலகத்தின் நாமத்தை பிரதிபலிக்கும் வகையில்  KNOWLDGE BANK பெயர் பலகையும் AM. RIYAS ( MANAGER ,SAMPATH BANK)  அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டு திரைநீக்கம் செய்யப்பட்டது.


மேலும் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்கமைய கடந்த 2024.10.11 ஆம் திகதி அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் தமிழ் இலக்கிய மன்றம் நூலகத்தோடு இணைந்து நடாத்தும் மாபெரும் கட்டுரை மற்றும்  வினாவிடைப்போட்டிகள்  பாடசாலை முதல்வர் MR. A. ABDUL GAFOOR அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பாடசாலை தமிழ் பாட இணைப்பாளரும் தமிழ் இலக்கிய மன்றத்திற்கு பொறுப்பான ஆசிரியருமான MR. YM. ASHRAF மற்றும் நூலக பொறுப்பாசிரியை MRS. ASHRAFF THAHA  ஆகியோரின் ஒழுங்கமைப்பில் கடந்த 2024.10

11 ஆம் திகதி பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ads