Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றை வெளியிட உயர் நீதிமன்றம் தடையுத்தரவு!


அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 


புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி அதில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 


@CM

ads