Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!


அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 


இதன்படி எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.


அத்துடன் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை இடம்பெறும்.


@CM

ads