Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல்- மதீனா மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கௌராவிக்கும் நிகழ்வு!

 


நிந்தவூர்,அல் -மதீனாt மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2023 க.பொ.த(உ.த) ப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 09 மாணவர்களையும், க.பொ.த (சா.தர)ப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற 06 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (01.11.2024) பாடசாலை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


பழைய மாணவர் சங்க செயலாளர்(தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்) கலாநிதி FHA.ஷிப்லி, பொருளாளர், (LOLC கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் )ஜனாப். AL. முஹம்மட் பாயிஸ் மற்றும் பழைய மாணவ சங்க நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களின் முழு ஒத்துழைப்புடன் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இப்பாடசாலையின் பழைய மாணவரும் தென் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியருமான A. ஹலீம் அவர்களும், சிறப்பு அதிதிகளாக இப்பாடசாலையில் கல்வி கற்று சாதாரணப் பரீட்சையில் முதற் தடவையாக அனைத்து பாடங்களிலும் All D பெற்ற Dr.U. சனு சியானா அவர்களும் மற்றும் Himas private limited முகாமைத்துவப் பணிப்பாளரும் காழி நீதவானுமாகிய ஜனாப் MIM.இல்யாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வுகள் யாவும் அதிபர் ஜனாப். MH. Mohamed Abdur Rafihu அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Tags

ads