Type Here to Get Search Results !
Developed by Cleverbit

லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!


லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!



விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத மகிழுந்து ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.


கண்டி- கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, நுகேகொடை கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். 


அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.


இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதற்காக காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


@CM

Tags

ads