புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்றைய தினம் (19) இடம்பெற்றது.
நேற்றைய தினம் 21 அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், அவர்கள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பத்தாவது நாடாளுமன்றத்தின் சபை முதல்வராகப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், நாடாளுமன்றத்தின் பத்தாவது கன்னி அமர்வு நாளை மறுதினம் (21) இடம்பெறவுள்ள நிலையில், அதன்போது, சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM