Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை!



இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளார்.


இது குறித்து அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். 


ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் 3 தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்ய இருந்தனர்.


எனினும் தற்போது ஏறக்குறைய 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.


ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.


ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா தம்பதி விவாகரத்து செய்ய உள்ளனர்.


இது குறித்து சாய்ராவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


"திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார்.


இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பின்னர் எடுக்கப்பட்டது.


ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்தபோதிலும், பிரிவது என முடிவு செய்துள்ளனர்.


மன கசப்புக்கள் மற்றும் பல சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது.


மிகுந்த வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை சாய்ரா எடுத்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads