Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!


நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


இதன்படி, வடக்கு, வடமத்திய தெற்கு, மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்றும் அதிகரித்து வீசக்கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையினால் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads