Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை மதுவரி திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!



மது உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட வரிக் காலகட்டத்தில் நிலுவைத் தொகையைச் செலுத்தாதது தொடர்பாக, அனைத்து நிலுவைத் தொகையையும் இம்மாதம் 30ஆம் திகதிக்குள் செலுத்துமாறு இலங்கை மதுவரி திணைக்களம் இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இலங்கை மதுவரி திணைக்களத்தின் கூற்றுப்படி, ஏறக்குறைய 10 நிறுவனங்கள் வரி நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டியுள்ளதுடன், அவை 8.5பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. 


இந்த காலப்பகுதிக்குள் செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads