Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பாதுகாப்பு செயலாளர் பொத்துவில் அறுகம்பே பகுதிக்கு விஜயம்!


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா அறுகம்பைப் பகுதிக்குக் கள ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.


அண்மையில்,அறுகம்பே பகுதியிலுள்ள பல சுற்றுலா தளங்களில், இஸ்ரேலியர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகின. 


இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த தாக்குதல் திட்டம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.


அதேநேரம், தாக்குதல் தொடர்பில் தங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதால், அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள், அறுகம்பைப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் பிரஜைகளை முன்னதாக அறிவுறுத்தியிருந்தது. 


இவ்வாறானதொரு பின்னணியில் பாதுகாப்பு செயலாளர், அறுகம்பைப் பகுதிக்குக் கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.


@CM

Tags

ads