Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கொழும்பு நோக்கிப் பயணித்த பேரூந்து விபத்து!



கொன்வெவயில் இருந்து மடகல்ல சென்று தலதாகம ஊடாக கொழும்பு நோக்கிப் பயணித்த மஹவ பேருந்து சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று (08) காலை கொன்வெவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


பேருந்து கவிழும் போது குறித்த பேருந்தில் 15 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.


விபத்தில் காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


@CM

ads