Type Here to Get Search Results !
Developed by Cleverbit

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

 


யாழ்ப்பாணத்தில் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார தலைமையிலான காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


@CM

Tags

ads