Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை!


பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் நாளை (05) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (06) காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 


நீர்கொழும்பு கொழும்பு பிரதான - வீதியின் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகள், கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 


@CM

Tags

ads