Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!


எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள்மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 15ஆம் திகதி போயா தினமாக இருப்பதால், இவ்விரு நாட்களிலும் பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன், தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் தினங்களில் விதிமுறைகளை மீறிச் சட்டவிரோதமான முறையில் செயற்படும் மதுபானசாலைகளுக்கு சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads