கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டடத்தின் பாதுகாப்பற்ற நிலைமை தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றுக்குச் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளதாகக் கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், நேற்றைய தினமும் குறித்த கட்டடத்திலிருந்து இரும்பு துண்டொன்று உடைந்து விழுந்துள்ளது.
கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அதன் சுற்றுப்புறப் பகுதியில் மிகுந்த பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
கட்டடத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமை தொடர்பில் கோட்டை காவல் நிலையத்திற்கு அறியப்படுத்தியிருந்த நிலையில், இது குறித்து இன்று நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
@CM