Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பாடசாலை சீருடை தொடர்பில் வெளியான தகவல்!


2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியின் மொத்தத் தேவை சுமார் 11.82 மில்லியன் மீற்றராகும்.


இதன்படி குறித்த முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் முடிவுகளை அமைச்சரவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை நெசவு மற்றும் ஆடைக் கைத்தொழில் நிறுவகத்தினால் (SLITA) இந்தத் துணி கையிருப்பு தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட மாதிரியைப் பரிசோதித்ததன் பின்னர், அவை பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு ஏற்றது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


@CM

Tags

ads