Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பேரூந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!


இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.


விபத்தில் படுகாயமடைந்த சாரதி, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துக்கு எதிர்த் திசையில், கினிகத்தனையில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகத்தில் பயணித்த வேன், முன்பாக பயணித்த முச்சக்கரவண்டியை, முந்திச்செல்வதற்கு முயன்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த பேருந்தும், வேனும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


@CM

ads