Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அல்-அஸ்ரப் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை!



கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி 19.11.2024 , 20.11.2024 ம் திகதிகளில் மாத்தறை கொட்டவில பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இறக்காமம் அல்-அஸ்ரப் மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை ) இறக்காமம் சார்பாக 13 வயதுப்பிரிவைச் சேர்ந்த Amaan 100M 200M ,நிகழ்ச்சியில் பங்கு பற்றி இரண்டு போட்டிப்பிரிவுகளிலும் மூன்றாம் இடத்தைப் பெற்று இரண்டு வெண்கல பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார். 


இச் சிறந்த சாதனையை மேற்கொண்டுள்ள சாதனை வீரர் Amaan அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


@CM

Tags

ads