Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வெள்ளத்தில் மாயமான மதரஸா மாணவர்களை தேடும் பணியில் ஆர்மி மற்றும் நேவி படையினர்!

 


காரைதீவு பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட துயரச் சம்பவத்தில், ஒரு உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி வெள்ளத்தில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் 6 மதரஸா மாணவர்கள் இதுவரை மாயமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


மாணவர்களைத் தேடும் பணியில் பொதுமக்கள், இலங்கை பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.


“இயற்கை அனர்த்தத்தில் மாயமான மாணவர்கள் உயிராபத்தின்றி மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கின்றோம்,” என பகுதியினரும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


@CM

Tags

ads