Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் வழங்கல் பாதிப்பு!


கொண்டுவட்டுவானிலிருந்து நீர் விநியோகிக்கும் பிரதான குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைவு காரணமாக, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் நீர் வழங்கல் தடைப்படலாம் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


இதனால் பாதிக்கப்படும் பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அல்லது ஏற்படும் அசௌகரியங்களுக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவித்துள்ளது.


உடைவிற்கு உடனடி பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நீர் வழங்கல் துரிதமாக மீளமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.


பொதுமக்கள் தற்காலிக மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்து தேவையான நீர்நிலைகளை முன்கூட்டியே சேமிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


@CM

Tags

ads