Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடிவு!


அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகா வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 


“உச்சநீதிமன்றம் உள்ளூராட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த ஆண்டு நடத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால் உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும்.. அதாவது நாங்கள் தேர்தலை நடத்தத் தயாராக உள்ளோம்.". எனவும் தெரிவித்தார்.


@CM

Tags

ads