Type Here to Get Search Results !
Developed by Cleverbit

உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!


அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் வெளியிட்ட திணைக்களம் புதுப்பிக்கப்பட் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேநேரம், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


@CM

Tags

ads