Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அடுத்த 3 நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது!



நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


அதற்கமைய மேற்படி பரீட்சைகள் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.


@CM

Tags

ads