Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கடவுச்சீட்டு கொள்வனவு விவகாரத்தில் பிரதிவாதியாக இணைக்கப்பட்ட ரணில்!


இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்தமையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதிவாதியாக இணைக்கப்பட்டுள்ளார். 


எபிக் லங்கா தனியார் நிறுவனம் குறித்த கொள்வனவு செயற்பாட்டைச் சவாலுக்கு உட்படுத்தி மனுவொன்றைத் தாக்கல் செய்தது.


குறித்த மனு இன்று (06) மொஹமட் லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்தினம் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.


அதன்போது, மனுதாரர் தரப்பு நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக குறித்த மனு இன்று (06) மொஹமட் லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்தினம் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.


அதன்போது, மனுதாரர் தரப்பு நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மனுவின் பிரதிவாதியாக இணைத்துள்ளது. 


750,000 சாதாரண கடவுச்சீட்டுகள் மற்றும் 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொள்வனவு செய்வதற்குக் கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


@CM

Tags

ads