பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வெற்றிபெற்ற அஷ்ரப் தாஹிர் அவர்களின் வெற்றியை நிந்தவூர் பசில் டெக்ஸ் நிறுவனம் உற்சாகத்துடன் கொண்டாடியது.
நிந்தவூர் பசில் டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், இன்று (17) வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் போதே பொதுமக்களுக்கு பாரம்பரிய கஞ்சி வழங்கப்பட்டு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் விழா சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பலர் கலந்து கொண்டு, அஷ்ரப் தாஹிர் அவர்களின் வெற்றியை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
@CM