Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

NPP இன் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகின!


பொதுத் தேர்தல் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப்பெற்ற 18 தேசிய பட்டியல் உறுப்பினர்களின் ஆசனங்களுக்கான பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.


தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்கவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, பிமல் ரத்நாயக்க, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி அநுர கருணாதிலக்க, பேராசியரியர் உபாலி பன்னிலகே, எரங்க உதேஷ் வீரரத்ன, அருண ஜயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியபெரும, ஜனித ருவான் கொடிதுவக்கு, ஸ்ரீ குமார ஜயகொடி, நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, லக்மாலி காஞ்சனா ஹேமரத்ன, சுனில் குமார கமகே, காமினி ரத்நாயக்க, பேராசிரியர் ருவான் சந்திம ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா, அபுபக்கர் ஆதம்பாவா மற்றும் ரத்நாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.


@CM

Tags

ads