மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தரவுகளைப் பகுப்பாய்வு செய்து மேலதிக கணக்கீடுகள் செய்யப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாகவே இவ்வாறு கால அவகாசம் கோரியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.