Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பாரவூர்தியின் பின் சக்கரத்தில் நசுங்கி 1 வயது பெண் குழந்தை உயிரிழப்பு!


ஹசலக்க காவல்துறை பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் பாரவூர்தியின் பின் சக்கரத்தில் நசுங்கி 1 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


தாயும் தந்தையும் குழந்தையுடன் உறவினர் வீட்டுக்குச் சென்ற வேளையில், அங்கிருந்த பாரவூர்தி ஒன்று அவ்வழியாகப் புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. 


விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.


விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


@CM

Tags

ads