Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஹட்டனில் பேருந்து விபத்து; காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!


ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் இன்று (21) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளயுள்ளது. 


ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 


இந்த விபத்தில் மூவர் பலி மற்றும் 30 க்கு அதிகமானவர்கள் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கும் வட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 


@CM

ads