Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பேராசிரியர் அச்சிமுஹம்மது இஷ்ஹாக் காலமானார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


                    - ஏ. ஷபாஅத் அஹமட் - 


நிந்தவூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிப்பவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும், அட்டாளைச்சேனை அரபிக் கல்லூரியின் பொறுப்பாளருமான பேராசிரியர் அல்ஹாஜ். அச்சிமுகம்மது இஷ்ஹாக் அவர்கள் நேற்றிரவு புனித மக்காவில் இறையழைப்பை ஏற்றுக்கொண்டார்.

இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.


தனது பேரப்பிள்ளைகள் சகிதம் புனித மக்காவில் உம்ரா கடமைகளை நிறைவு செய்த கையோடு இலங்கை நேரப்படி இரவு 8.00மணிக்கு அன்னாரின் உயிர் பிரிந்தது.


அன்னாரின் ஜனாஸா தற்போது மக்கா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் பூர்வாங்க நடவடிக்கைகளின் பின்னர் மக்காவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பேராசிரியர் இஷ்ஹாக் அவர்கள் நிந்தவூரைச் சேர்ந்த மர்ஹும் முத்துமுகம்மது ஹாஜியார், கதீஜா தம்பதிகளின் புதல்வரும்,


காலஞ்சென்ற நஸ்லி இஷ்ஹாக்கின் பாசமுள்ள கணவரும்,


காலஞ்சென்ற பொறியியலாளர் பஸீல் ஏ. மஜீத் அவர்களின் மருமகனும், 


மெரீனா அப்துல் மஜீத் மஹ்றூப் அவர்களின் மச்சானும், 


மரியத்தின் சகோதரரும், காலஞ்சென்ற உதவி அரசாங்க அதிபர் இப்றாலெவ்வையின் மைத்துனரும்,


அல்ஹாஜ். எம். ரி. ஏ. தௌபீக் (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமாவார்.


அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசமாய் அமைய பிரார்த்திப்போமாக🤲


@CM

Tags

ads