Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பொதுமக்களிடம் விசேட கோரிக்கை!


பண்டிகை காலங்களில் பொருட்களின் தகவல்களை திரிபுப்படுத்தி காலாவதியான பொருட்களை சந்தைக்கு விநியோகிக்கும் வர்த்தகர்களைத் தேடி சோதனைகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


அதற்கமைய, பண்டிகை காலத்தில் பொருட்களின் தகவல்களை திரிவுப்படுத்தி சந்தைக்கு விநியோகிப்பதற்குத் தயாராகவிருந்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, கடலை மற்றும் காலாவதியான பேரீச்சம்பழம் ஆகியன களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பல களஞ்சியசாலைகளில் நுகர்வோர் விவகார சபை அதிகார சோதனை நடத்தியது. 


களனி பெத்தியாகொட பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


அத்துடன், வத்தளை பகுதியில், இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளால் நடாத்தி செல்லப்படும்,களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, காலாவதியான 4.6 டன் காய்ந்த மிளகாய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், அவ்வாறான தகவல்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்க முடியும் என பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.


@CM

Tags

ads