Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தொடர்ந்தும் பெய்து வரும் மழையால் 16, 930 பேர் பாதிப்பு!


தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


கிழக்கு மாகாணத்திலே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.


இதன்படி, குறித்த மாகாணத்தில் 14,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன், வடக்கு மாகாணத்தில் 1,496 பேரும், வடமத்திய மாகாணத்தில் 356 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


@CM

Tags

ads