Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தொப்புள் கொடியுடன் கிணற்றுக்குள் வீசப்பட்ட குழந்தை!


யாழ்ப்பாணம் கைதடி முருகமூர்த்தி கோவில் பகுதியில் பரிதாபகரமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


பிறந்த குழந்தையின் சடலம் தொப்புள் கொடியுடன் கிணற்றுக்குள் இருந்து இன்று (21) மீட்கப்பட்டுள்ளது.


கிணற்றுக்குள் குழந்தை இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.


தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த குழந்தையின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.


இது குறித்து சாவகச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இதற்கான காரணங்களைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.


@CM

Tags

ads