Type Here to Get Search Results !
Developed by Cleverbit

2024 இடம்பெற்ற 5ம் தர புலமைப் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று அஷாதியா மரியம் நிந்தவூர் கோட்டத்தில் முதலிடம்!


நேற்று வெளியான ஸ்கொலஷிப் பரீட்சை பெறுபேறுகளின் படி நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தர பாடசாலை மாணவி ஷாகிர் அஹமட் அஷாதியா மரியம் 174 புள்ளிகளைப் பெற்று நிந்தவூர் கோட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளதுடன் தனது பாடசாலைக்கும் தனக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


இவர் காத்தான்குடி அமானா வங்கி முகாமையாளர் மற்றும் லகான் விளையாட்டுக் கழக தலைவர் சட்டத்தரனி ஷாகிர் அஹமட் ,நிந்தவூர் அஸ் ஸபா வித்தியாலய பிரதி அதிபர் ரிப்கா ரஸுல் ஆகியோரின் மகளுமாவர். 


ஓய்வு பெற்ற ஆசிரியர்களான மீராஷாகிப், ஆஷரா மீராஷாகிப், ஒய்வு பெற்ற அட்டாளைச்சோனை கல்விக் கல்லூரி பீடாதிபதி ரஸூல், பசிலா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.


இந்த மாணவியை வழப்படுத்தி பயிற்றிவித்த பாடசாலை சமுகத்திற்கும் ஆசிரிய குழாத்திற்கும் இவரின் பெற்றோர் மற்றும் மாணவிக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

Tags

ads