Type Here to Get Search Results !
Developed by Cleverbit

டிக்டொக் செயலிக்கு உறுதியான தடை!


அமெரிக்காவில் டிக்டொக் செயலி நாளை முதல் தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டொக் செயலிக்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.


குறித்த சட்டத்தின்படி, நாளைய தினத்திற்குள் அந்த செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யாவிட்டால் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டொக் செயலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், அந்நாட்டு அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி, டிக்டொக் நிறுவனம் அண்மையில் வழக்கு தாக்கல் செய்தது அத்துடன் கருத்து சுதந்திரத்திற்கு எதிராகக் குறித்த சட்டம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது.


இந்தநிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், குறித்த சட்டம் அரசமைப்பை மீறும் வகையில் இல்லை என தெரிவித்தது.


இதற்கமைய டிக்டொக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் வைப்பு அதிகரித்துள்ளது.


@CM

Tags

ads