Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மின்விளக்கு கோபுரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!



கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள மின்விளக்கு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


மேலும், இவ்விபத்தில் காயமடைந்துள்ளதாக ஒருவர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த விபத்து இன்று (18) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவம் தொடர்பாக துறைமுக காவல்துறையினர் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.


@CM

Tags

ads