Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்!


மடு காவல்துறை பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் மல்வத்து ஓயாவில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.


சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த நபர் 5 பேருடன் மடு தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையில் மடு காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.


@CM

Tags

ads