Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!


நாளை முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


அத்துடன், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


@CM

Tags

ads