Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் ஏற்பு!


புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்த விண்ணப்பங்களை இன்று (27) முதல் சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை இதற்கென விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.


2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.


@CM

ads