Type Here to Get Search Results !
Developed by Cleverbit

Eagle's View Point சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது!


நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6,182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுரத்தை சுற்றி இலங்கை விமானப்படையால் கட்டப்பட்ட கழுகு காட்சி முனை( Eagle's View Point ) இன்று (26) காலை திறந்து வைக்கப்பட்டது.


வெளிவிவகார, வேலைவாய்ப்பு வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.


சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்காகவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகவும் இலங்கையை ஒரு முக்கிய மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் நோக்கத்துடன் 2024 ஜூலை 31ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையின் உதவியுடன் இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.


@CM

Tags

ads