Type Here to Get Search Results !
Developed by Cleverbit

காதலியின் தாயைக் கொன்ற காதலன் கைது!


 இந்தியாவின் சென்னையில் பெண்ணொருவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட நபர் தனது காதலியின் தாயைக் கொலை செய்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


உயிரிழந்த பெண்ணுக்கும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.


தமது காதலியை அவரது தாயார் திட்டியமையினாலேயே கழுத்தை நெறித்ததாகக் சந்தேகநபர் அவரின் குறித்த காவல்துறையின் விசாரணைகளில் கூறியுள்ளார்.


இதேவேளை தாயின் கொலை மகளுக்கும் தொடர்புள்ளதாகத் தெரிவித்து அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


@CM

Tags

ads