Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வேகமாக பரவும் நோரோவைரஸ் தொற்று!


பிரித்தானியாவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருவதாக NHS (National Health Service) எச்சரித்துள்ளது.


லண்டன் டூட்டிங் பகுதியில் உள்ள புனித ஜோர்ஜ் மருத்துவமனையில், இந்த தொற்று காரணமாக மூன்று நோயாளர் விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நோரோவைரஸ் தொற்றானது மலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மூலம் பரவுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 


கை கழுவாமல் உணவுகளை தொட்டாலோ, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ இத்தொற்று பரவக்கூடும்.


எனவே, குறித்த தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


@CM

Tags

ads