Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அஸ்வெசும காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு 50% தள்ளுபடி விலையில் உணவுப்பொதி!


எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பதிவுசெய்யப்பட்டு பயனாளிகளாகப் தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி விலையில் உணவுப் பொதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 


அதன்படி, 5000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை 50% தள்ளுபடியில் அதாவது, 2,500 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.


லங்கா சதொச மூலம் உள்ளடக்கப்படாத பகுதிகளில் தகுதியான பயனாளிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்தத் தள்ளுபடி பொதி வழங்கப்படும்.


அஸ்வெசும பதிவுசெய்யப்பட்டு பயனாளிகளாகப் தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 812,753 குடும்பங்கள் பயனாளி குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


நிதி அமைச்சு, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலைய வலையமைப்பு ஆகியவை இணைந்து "சத்துடின் சதொசின்" என்ற கருப்பொருளில் ஒரு சிறப்புத் திட்டமாக இது செயல்படுத்தப்படும்.


@CM

Tags

ads