Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் றிஸாலா அமைப்பின் கௌரவ தலைவர் மௌலவி M.U.ஆஷிக் அலி (காஷிபி) அவர்களுக்கு இந்திய இலங்கை நட்புறவு ஒன்றியத்தால் சிறந்த சமூக சேவையாளருக்கான விருது வழங்கி கௌரவிப்பு!


இந்திய - இலங்கை நட்புறவு ஒன்றியத்தினால் மௌலவி M.U.ஆஷிக் அலி (காஷிபி) அவர்களுக்கு சிறந்த சமூக சேவையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


கண்டி சம்பத் மண்டபத்தில் தினகரன் பத்திரிகை ஆசிரியர் தீபன் தலைமையில் நடந்த நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாகவும், தினகரன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.


இலங்கையில் பல பிரதேசங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட Top 100 தலைப்பில் 100 பேர் தெரிவு செய்யப்பட்டனர். 


அவர்களில் கிழக்கு மாகாணம் நிந்தவூரிலிருந்து சிறந்த சமூக சேவையாளருக்கான விருது மௌலவி M.U.ஆஷிக் அலி (காஷிபி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.


சிறுவயதில் இருந்து சமூக, ஆன்மீக கடமைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் இவர்கள்,


 நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளராக மிகச் சிறப்பாக கடமையாற்றி வருவதோடு, 


ஊரின் பல்வேறு சமூக அமைப்புகளையும் தலைமை தாங்கி நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்றதோடு,


வெலிகம ஹிழ்ரிய்யா அரபுக் கல்லூரியில் ஒரு வருட ஹதீஸ் துறையில் தௌரா கற்கையையும் பூர்த்தி செய்துள்ளதோடு,


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ளக கலைத்துறையில் B.A பட்டத்தையும்,


 கண்டி பேராதெனிய பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய நாகரீகத்தில் M.A பட்டத்தையும் பூர்த்தி செய்ததோடு,


கல்வித்துறையில் PGDE பட்டமேற் பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார். 


மௌலவி M.U.ஆஷிக் அலி (காஷிபி) அவர்கள் இன்னும் பல சாதனைகள் பெற்று சமூகத்தில் சிறந்த சேவைகளை செய்ய சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.


@CM

Tags

ads