Type Here to Get Search Results !
Developed by Cleverbit

காசா போரை முடிவுக்குக் கொண்டு வர புதிய சூத்திரம் ஒன்று முன்மொழிவு!


காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குக் கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்கள் புதிய சூத்திரமொன்றை முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து நன்கு அறிந்த சிரேஷ்ட பாலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.


இதன்படி, ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை போர் நிறுத்தம் நீடித்தல், இஸ்ரேலிலுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றீடாக அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவித்தல், முறையான தீர்வு மற்றும் காசாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய சூத்திரம் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


@CM

Tags

ads