Type Here to Get Search Results !
Developed by Cleverbit

9 மாவட்ட விவசாயிகளின் உர மானிய நிதி இன்று வங்கிக் கணக்குகளில்!


சிறுபோகத்துக்காக 9 மாவட்டங்களின் விவசாயிகளுக்குத் தேவையான உர மானிய நிதி இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.


விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.


இதற்காக 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


இதேவேளை,சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபடும் அனைவரும், எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மருந்தினை அனைத்து பொதுச்சுகாதார பரிசோதகர்களிடமும் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


அதேநேரம் வயல்வெளிகளில் அல்லது அதற்கு அருகில் இம்முறை புத்தாண்டு நிகழ்வுகளை நடத்தும் போது எலிக்காய்ச்சல் குறித்து அவதானம் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


@CM

Tags

ads